வரவு செலவுத் திட்டமானது சுயபொருளாதார கொள்கையை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது! டக்ளஸ்

சுயபொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் ‘ஒரே நாடு ஒரே மக்கள்’ என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்றால் ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் பாரபட்சமற்ற, ஏற்றத்தாழ்வுகள் அற்ற முறையில் நாட்டின் அனைத்து தரப்பினரையும் கவனத்தில் கொண்டு குறித்த வரவு செலவுத் திட்டம் அமைக்கப்பட்டிருந்தது.

குறிப்பாகத் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தினை 1000 ரூபாயாக அதிகரித்தல் மற்றும் நுண்கடன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் வகையிலான பரிந்துரை போன்ற விடயங்கள் குறித்து வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இது சிறுபான்மை மக்களுக்குப் பொருளாதார தாக்கங்களையும், அழுத்தங்களையும் ஏற்படுத்துகின்ற காரணிகள் தொடர்பான அவதானம் செலுத்தப்பட்டிருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *