யாழ்.நகரில் வீடொன்றுக்குள் புகுந்த குழு அட்டூழியம்..! வாகனங்கள், வீட்டு தளபாடங்கள் தீக்கிரை

யாழ்.சுண்டுக்குளி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு கொழுத்தியதுடன், வீட்டிலிருந்த பொருட்கள், மற்றும் கதவுகளை உடைத்து நொருக்கியுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.

வீட்டிலிருந்த அனைவரும் உறக்கத்தில் இருந்த வேளையில் இனந்தெரியாத குழுவொன்றினால் இந்த தாக்குதுல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தபோதிலும் ஒரு மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. மற்றைய மோட்டார் சைக்கிள் சிறியளவில் எரிந்துள்ளது.

அத்துடன் அந்த தீ பரவி வீட்டிருந்த தளபாடங்களும் எரிந்து நாசமாகி உயுள்ளது குறித்த விடயம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சமபவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *