பளை வைத்தியசாலைக்கு கைக்குழந்தையுடன் சென்ற தாய்க்கு நடந்த கொடுமை! (படங்கள்)

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச வைத்தியசாலையில் நோயாளிகள் காத்திருக்க வைத்தியர் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் அனைவரும் சக ஊழியரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் 07/09/2020 காலை பளை பிரதேச வைத்தியசாலையில் கடமை நேரத்தில் இடம்பெற்றதாகவும், நோயாளர்கள் பல மணி நேரம் காத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குழந்தை பிறந்து 45நாட்களான தாயார் ஒருவர் ஒரு மாத குழந்தையுடன் வருகை தந்துள்ளார். இவர் உடல் சோர்வான நிலையில் வந்துள்ளார். இவரை சோதித்த கடமையில் இருந்த வைத்தியர் அவரை இரத்த பரிசோதனை செய்து வருமாறு கூறியுள்ளார்.

அதனையடுத்து அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவும் 09/09/2020 வரும் எனவும் கூறியுள்ளனர். அதன் பின் அந்த தாயார் மருந்தெடுப்பதற்காக சென்ற போது மருந்தகத்தில் மருந்து வழங்குனர் நீண்ட நேரமாக இல்லை.

வைத்தியசாலை கடமையில் உள்ள அனைத்து ஊழியர்கள் உட்பட வைத்தியர் எல்லோரும் சக ஊழியரின் பிறந்த தின கொண்டாட்டம் வைத்தியசாலையின் மேற்பகுதியில் கொண்டாடப்பட்டது. கடமை நேரத்தில் அனைவரும் பிறந்த தினம் கொண்டாடுகிறார்கள் என கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மூலம் அறியப்பட்டது.

அதன் பின் அந்த தாயாரின் கணவர் வைத்தியரை சந்திக்க வினாவியுள்ளார். மேலே செல்ல அனுமதி இல்லை என பாதுகாப்பு உத்தியோகத்தரால் கூறப்பட்டது.

இதையடுத்து அவரின் ஆனையை ஏற்று அவர் கீழே நின்று வைத்தியரை வருமாறு கூறியுள்ளார்.

அதற்கு வைத்தியர் காவலாளியிடம் பதில் அளித்ததாவது, அந்த தாயாரின் கணவரை வெளியில் பிடித்து விடும்படியும் இல்லாவிடில் பொலீசாருக்கு தகவல் கொடுத்து வெளியேற்றும்படியும் கூறியுள்ளார். அதன் பின் அந்த தாயாரும் கணவரும் வைத்தியசாலையை விட்டு வெளியேறினார்கள்.

அதன் பின் வைத்தியரின் வருகையை உறுதிபடுத்திய பின் மருந்து சிட்டையை கொண்டு மருந்தெடுப்பதற்காக வருகை தந்த அந்த குடும்பத்தார், அங்கு பணியாற்றும் கடமை நேரத்தில் பிறந்த நாளை கொண்டாடி நோயாளர்களையும் காத்திருக்க வைத்து அதை கேட்க சென்ற பொதுமக்களையும் அவதூராக பேசியதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கு மீண்டும் வருகை தந்த அந்த குடும்பத்தாருடன் வைத்தியர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன் போது அந்த கணவர் ஒரு ஊடகவியலாளர் என்பதை அறிந்த வைத்தியர் அவரை அந்த வைத்தியசாலையில் உள்ள பெண்களை வீடியோ பதிவு செய்வதற்காக வந்தீர்களா என்று அவதூறாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த கணவர் தான் ஊடகவியலாளர் என்ற வகையில் வரவில்லை பொதுமகனாக கேட்கிறேன் கடமை நேரத்தில் பிறந்ததின கொண்டாட்டம் தேவையா என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.

அங்கு வந்திருந்த போக்குவரத்து பொலீசாரிடம் வைத்தியசாலையுள்ள தாதியார்களையும் ஊடகவியலாளர் என அடையாளபடுத்தி தன்னையும் அச்சுறுத்தியதாக கூறியுள்ளார்.

மேலும் அந்த ஊடகவியலாளரின் ஊடக அடையாள அட்டை பரிசோதித்துள்ளார் வைத்தியர்

தயவு செய்து நோயாளிகளை மேலும் நோயாளியாக்காதீர்கள்

உங்களுக்கென கொடுக்கப்படுகிற நேரத்தில் நீங்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள் உங்களிடம் வரும் நோயாளர்கள் அவர்களது வேலைகளை விட்டு பிள்ளைகளை வேறு வீடுகளில் விட்டும் எத்தனையோ சிரமத்தின் மத்தியில் வருகின்றனர் உங்களை நம்பி அவர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் சில வைத்தியர்கள் நடந்து கொள்கின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *