பழைய பப்ளிமாஸ் தோற்றத்திற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்..

தேசிய விருது வாங்கிய நேரமோ என்னமோ கீர்த்தி சுரேஷுக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார். அதற்கு ஹிந்தி பட வாய்ப்பை நம்பி உடலை குறைத்தது தான் முக்கிய காரணம் என்கிறது கோலிவுட்.

கைவசம் தெலுங்கில் ஒரே ஒரு படம் மட்டுமே வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்(keerthi suresh). இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர்களிடம் கவர்ச்சியில் களமிறங்கி ரெடியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் எலும்பும் தோலுமாக இருக்கும் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்களுக்கு பெரிதும் விருப்பம் இல்லை. இதை நேரடியாகவே அவரிடம் தெரிவித்து விட்டார்களாம்.

இதனால் இந்த ஊரடங்கை பயன்படுத்தி உடல் எடையை மீண்டும் கூட்டி பழையபடி கொழுக் மொழுக் என உருவாக இருக்கிறாராம். அந்த முயற்சியில் பாதி வெற்றி அடைந்து விட்டாராம்.

தற்போது ஏர்போர்டில் சோடா பொட்டி கண்ணாடியில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *