ஆரம்பத்திலே ரசிகர்களை குழப்பி விட்ட கமலஹாசன்.. இணையத்தை தெறிக்கவிடும் பிக்பாஸ் சீசன் 4 வீடியோ

பிரபல விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி 3 சீசன்களை தொடர்ந்து தற்போது நான்காவது சீசனுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறது. உலகமே பல பிரச்சனைகளை சந்தித்தாலும் விஜய் டிவி தன்னுடைய வேலையில் கரெக்டாக உள்ளது.

மக்கள் கவரும் வகையிலும் வெறுக்கும் வகையிலும் போட்டியாளர்களை தேர்வு செய்து ஒரே வீட்டிற்குள் அடைத்து ஒருவரை ஒருவர் சண்டை போட வைத்த டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றுக்கொள்வதில் கில்லாடிதான்.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு செய்து அதில் சமீபகாலமாக டிக்டாக்கில் கவர்ச்சியில் கண்டம் செய்யும் இலக்கியா, ரம்யா பாண்டியன் பங்குபெற போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தற்போது பிக் பாஸ் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக கமலஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சி புரோமோஷனல் வீடியோ வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வித்தியாசமான கெட்டப்பில் மிக அற்புதமாக வெளிவந்துள்ள இந்த வீடியோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தேர்தல் வரும் சமயத்தில் கமலஹாசன் பிரச்சாரத்தை தொடங்கி விட்டதாகவும், வழக்கம் போல் குழப்பி விட்டதாகவும் விமர்சனங்கள் தெறிக்க விடுகின்றனர்.

இதனால் எதிர்க்கட்சிகள் சற்று பீதியில் உள்ளதாக தெரிகிறது. எது எப்படியோ கொரோனாவால் மன அழுத்தத்தில் உள்ள ரசிகர்களுக்கு பிக் பாஸ் 4 மற்றும் ஐபிஎல் தொடர் சற்று ஆறுதலாக இருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *