நயன்தாராவை வம்புக்கிழுத்த சமந்தா.. அடித்துக்கொள்ளும் முன்னணி நடிகைகள்

முன்னணி நடிகர்களுக்கு நிகராக நடிகைகள் சம்பளம் வாங்குவது தற்போது சகஜமாகி விட்டது. அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 6 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

அதாவது தமிழ் படங்களுக்கு 5 கோடியும், மற்ற மொழிகளில் நடிப்பதற்கு 6 கோடி சம்பளம் கேட்கிறாராம். இது ஒருபுறமிருக்க சமீபத்தில் சமந்தாவை சந்தித்த தயாரிப்பு நிறுவனம் ஒன்று கால்ஷீட் கேட்டுள்ளனர்.

அப்போது சமந்தா தனக்கு மூன்றரை கோடி சம்பளம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அந்த தயாரிப்பு நிறுவனம் நெஞ்சை பிடித்து விட்டு கீழே சாய்ந்து விட்டார்களாம்.

இதற்கு காரணம் கூறிய சமந்தா நயன்தாராவிற்கு மட்டும் 6 கோடி கொடுக்கிறீர்கள் எனக்கு மூன்றரை கோடி கூட தர முடியாதா என்று கேள்வி எழுப்பியுள்ளாராம். இதனால் அந்த நிறுவனம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று தலை தெறிக்க ஓடிவிட்டனர்.

ஏற்கனவே ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கும் சமந்தா மூன்றரை கோடி சம்பளம் கேட்பது சற்று அதிகப் பிரசங்கித் தனமாக தெரிகிறது. இதனால் பட வாய்ப்பை இழந்துள்ளார், தற்போது அந்த பட வாய்ப்பு திரிஷாவிற்கு கொடுக்கப்பட்ட உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் திரிஷாவிற்கு ஒரு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் 80 லட்சம் கொடுத்தால் கூட வாங்கிக் கொள்வாராம். இதனால் இந்த கால்சீட்க்கு ஒப்புக் கொள்வாரா என்று தயாரிப்பு நிறுவனம் வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *