விக்னேஸ்வரனின் பேச்சால் தமிழர்களுக்கு பாதகமே! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்றப் பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளையும் பெற்றுத் தரப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னுடைய முதலாவது நாடாளுமன்ற உரையில் வெளியிட்ட கருத்துக்கள் தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

விக்னேஸ்வரனின் கருத்துக்கள் சில தமிழ் ஊடகங்களாலும், சமூக ஊடகங்களாலும் பெரிதாக சிலாகிக்கப்பட்டாலும், எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கோ அல்லது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கோ எந்தவிதமான தீர்வைப் பெற்றுத்தராது.

மாறாக பாதகங்களையே அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார். தற்போது பலமான மத்திய அரசாங்கம் அமைந்துள்ளது.

இந்நிலையில், அரசாங்கத்துடன் தனக்கு இருக்கும் தேசிய நல்லிணக்கத்தினைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *