கூட்டமைப்பின் பின்னடைவிற்கு சுமந்திரனின் கருத்துக்களும் காரணம்: சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் நேற்று சந்தித்து கல்துரையாடிய போது அண்மைய தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட பின்னடைவிற்கு எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்களும் ஒரு காரணம் என்பதை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களிற்கிடையிலான கலந்துரையாடல் நேற்று இரவு இடம்பெற்றது.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பதவிக்கு ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், கட்சியின் கொறடா பதவிக்கு புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனும் நியமிக்கப்படுவதென ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டு வருகின்ற வாரம் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிப்பது என ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில், நடந்து முடிந்த தேர்தல் பின்னடைவு குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்கள் கட்சித் தலைவர்களால் பிரஸ்தாபிக்கப்பட்டது.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுள்ள எமது ஆதரவாளர்களிடமும் அந்த கருத்து பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னிடமும் அதைப்பற்றி பேசியுள்ளனர் தேவையற்ற சில சச்சரவுகளை சுமந்திரன் உருவாக்குகிறார் அது பற்றி பல முறை அவரிடம் நான் கூறியிருக்கிறேன். பொதுத்தேர்தலின் பின் என்னைச் சந்தித்த பலர் இவரது செயற்பாடுகள் தேர்தல் பின்னடைவிற்கு பாரிய காரணம் என கூறியிருக்கிறார்கள் என சம்பந்தன் கூறியதாக பெயர் குறிப்பிட விரும்பாத கூட்டத்தில் கலந்து கொண்ட முக்கியஸ்தர் தெரிவித்தார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *