யாழ் போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ள அதிநவீன ஸ்கானர் இயந்திரம்!
சுகாதார அமைச்சினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 160 மில்லியன் ரூபா பெறுமதியான டிஜிட்டல் சிசி ஸ்கானர் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த டிஜிட்டல் ஸ்கானர்தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுநானந்தா கூறுகையில்,
யாழ் போதனா வைத்திய சாலைக்கு சுகாதார அமைச்சினால் டிஜிட்டல் சிசி ஸ்கானர் இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கானரின் பெறுமதி சுமார் 160 மில்லியன் ரூபா ஆகும். இது இலங்கையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டும் காணப்படுகின்ற நிலையில், அடுத்ததாக தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சில நோய்களை இலகுவாக இனங்கண்டு கொள்ள கூடியதாக இருக்கும். குருதிக் கலன்களின் நாடி நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது இந்த கருவி மூலம் இலகுவாக கண்டறியக் கூடியதாக இருக்கும்.
அத்துடன் இதற்குரிய தகுதி வாய்ந்த வைத்திய ஆளணியினரும் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இதன் மூலம் சிறுநீரகத்திற்கு செல்லக்கூடிய கலங்களில் ஏற்படும் மாற்றம் மற்றும் மூளைக்கு செல்லும் கலங்கள், இதயத்தில் ஏற்படுகின்ற அடைப்புகளை இலகுவாக கண்டறியக் கூடியது.
இநிலையில் குறித்த இயந்திரம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டமையானது வடக்கு மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.