கிளிநொச்சியில் அம்பாம் புயல் தாக்கத்தினால் பலத்த சேதம்!
அம்பாம் புயல் தாக்கத்தினால் கிளிநொச்சியில் வீடுகள் மற்றும் பொது இடங்களின் கட்டடங்களிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் இரவு வீசிய பலத்த காற்று காரணமாக மக்களின் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக தற்காலிக வீடு சேதமடைந்துள்ளது. இதன்போது வீட்டில் தங்கியிருந்த 70 வயதான குடும்பஸ்தர் காயமடைந்த நிலையில் அக்கராயன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை திருவையாறு பகுதியில் கிராமசேவையாளர் கட்டடம் மற்றும் முன்பள்ளி கட்டடங்களின் கூரைத் தகடுகளும் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் நேரில் பார்வையிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும். இதுவரை 8 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பகல் ஊடகங்களிற்கு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் 6 வீடுகளின் கூரைத்தகடுகள் தூக்கி வீசப்பட்டுள்ளதாக கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் சேகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.