கனடா முதியோர் இல்லத்தில் உயிரிழந்த யாழ்.வடமராட்சியைச் சேர்ந்த தம்பதிகள்!

இலட்சக்கணக்கான உயிர்களை பலியெடுத்து வருகின்ற கொரோனா கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மற்றொரு வயோதிபத் தம்பதியரையும் பலியெடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறையை சேர்ந்த நேரு என்று அழைக்கப்படும் ஜவர்ஹர்லால் நேரு குமாரசாமி மற்றும் அவருடைய மனைவி இராஜேஸ்வரி ஆகியோர் கனடாவில் உயிரிழந்துள்ளனர்.

கணவன் 14ஆம் திகதி உயிரிழந்த நிலையில் மனைவி மறு நாளே (15) உயிரிழந்துள்ளார். ஸ்காபரோவின் முதியோர் பராமரிப்பு நிலையத்தில் இருவரும் நீண்டகாலமாக பராமரிக்கப்பட்டு வந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தபால் திணைக்களத்தில் அதிபராகப் பணி புரிந்தவர் என்றும் 1980 ஆம் ஆண்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சமூக அக்கறை கொண்ட அவர் புலம்பெயர் தளத்தில் ஊடகச் செயற்பாட்டளராகவும் கடமையாற்றியுள்ளார் என்று கனேடியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *