எதிர்வரும் நாட்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீள ஆரம்பிக்க ஜனாதிபதி தீர்மானம்

எதிர்வரும் நாட்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் ஆரம்பித்து அன்றாட நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போதே இவ்வாறு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பணிகளை தடையின்றி மேற்கொள்ளும் வகையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு இந்த கூட்டத்தில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் ஒன்றுக்கூடுவதற்கு இடமளிக்காமல் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி கடமைகளை நடத்தி செல்வதற்கான பொறுப்பினை அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விவசாயம், மீன்வளம் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்களை மீண்டும் ஆரம்பிக்க தேவையான சூழலை அமைப்பதில் அமைச்சுகளுக்கு ஆலோசனை வழங்கி செய்படுமாறு ஜனாதிபதி, செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

புதிய பொருளாதார முறையை உருவாக்குவதற்கான பொறிமுறையை வளர்ப்பதற்கான பொறுப்பு அமைச்சுக்களிடம் வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *