தோனி நமக்குக் கிடைக்கமாட்டார் – இங்கிலாந்து கேப்டன் அதிரடி!

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தோனி ஓய்வுபெறுவது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

உலகக்கோப்பைக்குப் பின் சர்வதேசக் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது மட்டுமே ஒரே வாய்ப்பு என சொல்லப்பட்டது. இதை முன்னாள் வீரர் கபில்தேவ் மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் கபில்தேவ் உள்ளிட்டவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடப்பது சந்தேகமாகியுள்ளது. மேலும் நடந்து அதில் சிறப்பாக அவர் விளையாடினாலும் அணியில் இடம் கிடைப்பது சந்தேகம்தான் என முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். இதுபோல தோனி இந்திய அணியில் இடம் பிடிப்பது குறித்தது பலரும் பலவிதமாக பேசிவரும் நிலையில் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே ‘தோனியின் இந்திய கனவு முடிந்துவிட்டதாக அவர் நினைக்கிறார். டி20 உலகக் கோப்பையை தோனி குறிவைக்கவில்லை என நினைக்கிறேன். ஒருவேளை அவருக்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தால் அதற்கு வாய்ப்பிருந்திருக்கும். ஆனால் அந்த நிலைமை தற்போது கடந்துவிட்டது என நினைக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார். இதுபோல பலரும் தோனி குறித்தான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான நாசர் ஹுசைன் ‘தோனி அணிக்கு இன்னும் அதிகமாக பங்களிக்க முடியும். அவர் சில தோல்விகளை சந்தித்திருந்தாலும், அவரிடம் திறமை உள்ளது. பிசிசிஐ அவரிடம் என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு முறை அவர் ஓய்வு பெற்றுவிட்டால் மீண்டும் கிடைக்கமாட்டார். தோனி என்ன நினைக்கிறார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். அனால் அணியில் தொடர விரும்புவதாகவும் தேர்வுக் குழுவினர் தன்னைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் ஏற்கனவே கூறியிருக்கிறார்’ எனக் கூறியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *