யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கி நிசாந்தினிக்கு செய்த அலங்கோலம்!!

முதல் நாளே ஜனாதிபதியின் உத்தரவை மீறிய இலங்கை வங்கி முகாமையாளர்.

அராலி மேற்கு வட்டுக்கோட்டை (J/160) பகுதியில் வசிக்கும் மயூரன் நிசாந்தினி, இவர்கள் இன்றைய தினம் இலங்கை வங்கி வட்டுக்கோட்டை கிளையில் உறவினர் ஒருவர் அனுப்பிய ரூபாய் 2000 இனை பெறுவதற்கு சென்றிருந்தனர்.

இவர்கள் கடந்த ஆண்டு ரூபா 1 லட்சத்தினை கடனாக பெற்றிருந்தனர். இந்த  தொகையினை காலம் தவறாது கடந்த மாதம் வரையிலும் சரியாக மீள செலுத்தி வந்தனர்.

Bank loan collection

யாழ்ப்பாணத்தில் இலங்கை வங்கி நிசாந்தினிக்கு செய்த அலங்கோலம்!!

Posted by NewJaffna on Selasa, 24 Mac 2020

இந்த மாதம் வீட்டு வறுமை காரணமாக உறவினர் வழங்கிய 2000 ரூபா பணத்தினை பெறுவதற்கு வங்கிக்கு சென்ற போது அதனை வழங்க மறுத்துவிட்டார்.

கணவர் கடற்தொழில் செய்பவர். இவ்வாறான நிலையில் மாண்புமிகு ஜனாதிபதி மக்களின் நன்மைக்காக செயற்படும் போது இவ்வாறான அதிகாரிகளால் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கே இழுக்கு ஏற்படுகின்றது என அப்பகுதி மக்கள் நிசாந்தினியின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *