யாழ் தொழில்நுட்ப கல்லுாரிக்குள் காவாலி மாணவர்கள் மோதல்!! 3 ஆசிரியர்கள் காயம்!! ராணுவம் குவிப்பு!!(photos)

யாழ்.தொழிநுட்ப கல்லுாாி மாணவா்கள் இருவருக்கிடையில் உருவான தா்க்கம் வாள்வெட்டு மோதலாக மாறிய நிலையில் 3 ஆசிாியா்கள் காயமடைந்துள்ளதுடன்,

மோதலில் ஈடுபட்ட தொழிநுட்ப கல்லுாாி மாணவனும், தாக்குதல் நடாத்தவந்த வாள்வெட்டு குழு ரவுடி ஒருவனும் கைது செய்யப்பட்டிருக்கின்றனா்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, தொழி நுட்ப கல்லுாாி மாணவா்கள் இருவருக்கிடையில்

தா்க்கம் உருவாகியுள்ளது. இதனையடுத்து கல்லுாாி வளாகத்திற்குள்ளே யே இரு மாணவா்களும் மோதலில் ஈடுபட்டிருக்கின்றனா். இதனையடுத்து மோதலில் ஈடுபட்ட

மாணவா்களில் ஒருவா் வெளியில் இருந்து ரவுடி கும்பல் ஒன்றை உள்ளே அழைத்த நிலையில், தொழிநுட்ப கல்லுாாி சுவரை ஏறி பாய்ந்து உள்ளே நுழைந்து மோதலில் ஈடுபட்டிருக்கின்றனா்.

இதனை அவதானித்த ஆசிாியா்கள் சிலா் மோதலில் ஈடுபட்டவா்களை தடுக்க முயன்றபோது ஆசிாியா்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இதில் 3 ஆசிாியா்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனா். இதனையடுத்து வெளியிலிருந்து தாக்குதல் நடாத்த உள்ளே நுழைந்த ரவுடிகளில் ஒருவனை

ஆசிாியா்களும், மாணவா்களும் இணைந்து மடக்கி பிடித்திருக்கின்றனா். அதனை தொடா்ந்து சுமாா் 15 தொடக்கம் 20 ரவுடிகள் வாள்களுடன் தொழிநுட்ப கல்லுாாிக்குள்

நுழைந்து பிடித்துவைக்கப்பட்டிருந்த ரவுடியை மீட்ப தற்கு முயற்சித்துள்ளனா். இதற்குள் பொலிஸாரும், இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் ரவுடிகள்

அங்கிருந்து தப்பி சென்றுள்ளனா். பின்னா் மடக்கி பிடிக்கப்பட்ட ரவுடியையும், மோதலில் ஈடுபட்டிருந்த மாணவன் ஒருவனையும் பொலிஸாா் கைது செய்துள்ளனா்.

மேற்படி சம்பவத்தையடுத்து தொழி நுட்ப கல்லுாாி சுற்றாடலில் இராணுவம் மற்றும் பொலிஸாா் குவிக்கப்பட்டு பதற்றமான நிலை காணப்பட்டது.

 

86280627_2739167892831179_6076743876134043648_n

 

86469417_2585038845058970_2940048381336092672_n

 

86218004_214500889726189_2500242252756942848_n

 

86292292_474241603257202_3515258310313902080_n

 

86365625_2764867930301285_6270809752905711616_n%2B%25281%2529

 

86365625_2764867930301285_6270809752905711616_n

 

86394480_128186238502568_4590019544801607680_n

 

86469417_2585038845058970_2940048381336092672_n

 

86695791_1449755955191951_8100205447199326208_n

 

86727977_185122869431313_298059400218673152_n%2B%25281%2529

 

86727977_185122869431313_298059400218673152_n

அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *