வவுனியாவில் திருமணமான 2 நாட்களில் இளம் தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்!

வவுனியா – முருகனூர் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள்ளார்.

அத்துடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் முருகனூரை சேர்ந்த 25 வயதான தர்சினி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணும் அவரது கணவரும் முருகனூர் பகுதியில் அமைந்துள்ள தமது வீட்டிலிருந்து சிதம்பரபுரம் நோக்கி முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தனர்.

இதன் போது, கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி அருகில் இருந்த மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகிள்ளது.

விபத்தில் காயமடைந்த கணவன் மற்றும் மனைவி அம்யூலன்ஸ் வாகனம மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டபோது சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இவர்கள் இருவருக்கும் கடந்த இருதினங்களிற்கு முன்னரே திருமணம் நடந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *