யாழ் மாநகர சபையின் அசிங்கமாக மாறும் ஆர்னோர்ல்ட்! பதில் இன்றி திக்கு முக்காடும் கேவலம்

யாழ்ப்பாண மாநகரம் என்பது பெருமைக்குரியது மட்டுமல்லாமல் பல நல்ல திட்டங்களையும் நகரத்திக் கொண்டு சென்றதொரு இடமாக இருந்தது.

ஆனால் தற்போது அதன் நிலை எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை அண்மைய கூட்டத் தொடர்பில் சான்று பகரும். கூட்டங்களின் போதான சொற்பிரயோகங்களும், உறுப்பினர்களின் அசிங்கத்தனமான வார்த்தைப் பிரயோகங்களும் தற்போது கேலிக் கூத்தாக மாறியிருக்கிறது.

சாதியப் பிரச்சினைகளும், ஊதியப் பிரச்சினைகளும் மாத்திரமல்லாது, பேசக் கூடாத அசிங்கமான சொற்பிரயோகங்களையும் யாழ். மாநகர சபைக்குள் இருந்து வெளிவருவதனை ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் அறிந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இதற்கிடையில், மாநகர சபையின் முதல்வர் ஆர்னோல்ட் தொடர்பிலும் தமிழ் மக்கள் அறியாதது என்று எதுவும் இல்லை. தான் தோன்றித்தனமாக செயல்படும் சர்வாதிகாரப் போக்கை அவர் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை மாநகர சபை உறுப்பினர்கள் அடிக்கடி எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஏற்றால் போல அவரின் பேச்சுக்களும், உரைகளும் அமைவதையும் அவதானிக்க முடியும்.

இந்நிலையில், அண்மைய கூட்டத் தொடரின் போது உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதல்வர் என்ற ரீதியில் ஆர்னோல்ட் சரியான பதிலை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் நான் சொல்வதே சரி, நான் சொல்வதே சட்டம். இதை நீங்கள் ஏற்றாக வேண்டும் என்று சர்வாதிகாரப் போக்கில் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தான் சொல்வதே உண்மை என்றும், தன்னுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஏனைய கட்சிகளுக்கு அவர் கட்டளையிடுவது போன்று கடும் தொனியில் பேசுவதைப் போன்று, அவரின் கடும் விசுவாசியான ஆர்னோல்ட் நடந்து கொள்வதில்லை வேடிக்கையில்லை.

ஆனாலும், தமிழ் மக்களின் பெரும் அடையாளங்களில் ஒன்றான யாழ். மாநகர சபையின் முதல்வராக இருந்துகொண்டு அவரின் அடாவடித் தனமான பதில்களை தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்வார்களா என்பதையும் முதல்வர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏனெனில், தியாகத்திற்கும், இழப்பிற்கும் பெயர் போன மண்ணிலிருந்து கொண்டு இப்படியான பதவிகளை அலங்கரிக்கும் இவர்களை எந்தளவு தூரம் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அதிகாரத்தில் அமர்த்தி அழகுபார்ப்பார்கள் என்பதை வருங்கால தேர்தல் முடிவுகள் பதில் சொல்லு.

ஆனால், ஆர்னோல்ட் போன்ற பதவி ஆசைபிடித்தவர்கள், மாநகர சபையின் அசிங்கமாக செயற்பட்டுக்கொண்டிருப்பது தமிழ் மக்களின் வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருப்பார்கள் என்கிறார்கள் யாழ். மாநகர சபையின் உறுப்பினர்கள்.

தங்கள் அதிகாரத்திற்காகவும் சுகபோகத்திற்காகவும் இவர்கள் இதுபோன்று அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வது தொடர்ந்தும் நீடித்து நிலைத்திருக்க கூடாது என்றார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *