முதல் தடவையாக மன்னாரில் மீனவரொருவருக்கு கிடைத்த அதிஷ்டம்
மன்னாரில் அதிகூடிய நிறை கொண்ட கணவாயொன்று பிடிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மீன்பிடிக்க சென்ற போது அதிஷ்டவசமாக அந்த மீனவருக்கு இந்த கணவாய் கிடைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த கணவாய் 12.25 கிலோகிராம் நிறை கொண்டது என தெரிவிக்கப்படுகிறது.
அதி கூடிய நிறை கொண்ட கணவாய் பிடிபட்டமை இதுவே முதல் தடவை என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.