யாழ் பனை அபிவிருத்தி அதிகாரசபைக்கு தலைவராக ஒரு சிங்களவர் நியமனம்

யாழ்ப்பாணம் பனை அபிவிருத்தி அதிகாரசபை தலைவராக வியாங்கொடையை சேர்ந்த சிங்களவர் ஒருவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கிரிசாந் – பத்திராஜ என்னும் பெரும்பான்மை இனத்தவரே கடந்த மாதம் பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பனை அபிவிருத்திச் சபைக்கு ஆட்சி மாற்றங்களின்போது பலர் மாற்றப்பட்டாலும் தொடர்ச்சியாக தமிழர்கள் நியமிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சபைக்கான தலைவர் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் சபை அங்கத்தவர்கள் எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.

இதேநேரம் வடக்கில் உள்ள சபைகள் நிறுவனங்கள் வரிசையில் காங்கேசன்துறை சீமேந்து கூட்டுத்தாபனத்திற்கும் சிங்களவர் ஒருவரே நியமிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *