ஆவினத்திற்கு நன்றிகூறும் மாட்டுப் பொங்கல்!

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும்.

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.

மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

தைத் திருநாளின் 2ஆம் நாளான இன்று உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

உலகப்பொதுமறை தந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் கல்வியைப்பற்றிக் கூறுகையில், ‘கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றயவை’ எனக் கூறுகிறார்.

இங்கு அவர் ‘மாடு’ என்று சுட்டுவது வெறும் நான்குகால் விலங்கை அல்ல மாறாக செல்வத்தை. மாட்டை செல்வத்திற்கு ஒப்பிடுகிறார்.

அன்றைய காலத்தில் கிராமங்களில் மாடில்லாத வீடுகள் கிடையாது. வீட்டில் மாடு வளர்ப்பதால் செல்வம் பெருகும். காலையில் பசுமாட்டில் விழித்தால் அன்றையநாள் சுபமாக சகல சித்திகளும் கிடைக்குமென்று கூறுவார்கள்.

அதனால்தான் இந்துக்கள் பசு வதையை எதிர்க்கிறார்கள். சிவனின் வாகனம் என்பதாலும் பசுவை கோமாதா என்று வணங்குகிறார்கள். கோமாதா பூஜை ஆலயங்களில் நடத்துவது வழமை.

வீடுகள் குடிபோவதற்கு முதல்நாள் வீட்டில் பசுமாட்டைக் கட்டுவது வழங்கம். ஆலயங்களில் தேரோட்டம் ஆரம்பமாவதற்கு முன்னரும் பசுமாட்டில் விழித்து, தீபம்காட்டி, உணவுஉண்ணக் கொடுத்து, வழிபட்டே செய்வார்கள்.

அப்படி மாடுகள் உழவுத்தொழிலில் மட்டுமல்ல இந்துக்களின் வாழ்வியலில் முக்கியத்துவம் பெறும் ஒரு செல்வமாகும். அத்தகைய மதிப்புள்ள செல்வமான மாடுகள் அன்று உழவுத்தொழிலில் மட்டுமல்ல விவசாயத்தில் மிகவும் கூடுதலான பாகத்தை வகித்தன என்றால் மிகையல்ல.

உழவில் மட்டுமல்ல சூடுவைத்து விளைந்த நெல்மணிகளை வீட்டுக்கு கொண்டுவருவது வரையில் மாடுகளின் பங்கு முக்கியமானது. ஆவினத்திற்கு நன்றி கூறும் நாள்!உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும்.

பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ பொங்கல்! மாட்டுப் பொங்கல்! பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி அழகுபடுத்துவார்கள்.

திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். உழவுக் கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துக் கருவிகளையும் இதேபோல செய்வார்கள்.

தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர் பச்சைகளை வைத்தும் தேங்காய் பூ பழம் நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள்.

தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன்பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல் பழம் கொடுப்பார்கள்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும். மாட்டுப் பொங்கல் கொண்டாட காரணம்! பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய மற்றொரு புராணக் கதையும் உள்ளது. அது சிவபெருமான் சம்பந்தப்பட்டது.

பொங்கலுக்கு மூன்றாவது நாளான மாட்டுப்பொங்கல் என்பது சிவபெருமானும் அவருடைய வாகனமான நந்தியும் சம்பந்தப்பட்டதாகும்.

புராண கதையின் படி, ஒரு முறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறு சிவபெருமான் கேட்டுள்ளார். தவறாக சொல்லிய நந்தி தினமும் எண்ணெய் மசாஜ் செய்த பிறகு குளித்து மாதம் ஒரு முறை மட்டும் உண்ணுமாறு அங்கே இருக்கும் மக்களிடம் தான் கூறச் சொன்னதாக நந்தியை கூறச் சொன்னார்.

ஆனால் நந்தியோ மாதமுறை எண்ணெய் மசாஜ் செய்து குளித்து தினமும் உண்ணுமாறு தவறாக கூறி விட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்தியை சபித்தார். அது செய்த தவறினால் இனி பூமியில் நெற்பயிர்களுக்கு பஞ்சம் ஏற்படும் என கூறினார்.

இனி அது என்றுமே பூமியில் வாழ்ந்து மக்களுக்கு அவர்களின் நிலத்தை உழுது கொடுக்க வேண்டும் என அவர் சாபமளித்தார். அதனால் தான் மாட்டுப் பொங்கலுடன் மாடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.
பொங்கலைத் தொடர்ந்து வருவது மாட்டுப் பொங்கல். இந்த நாளில் உழவர் நண்பர்களாக விளங்கும் மாடுகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம் வைத்து மலர் மாலை அணிவித்து மாட்டின் கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து விவசாயிகள் அதனை கடவுளாக வழிபடுவர்.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு வண்ணம் பூசி கூரான கொம்பில் சலங்கை கட்டிவிடுவார்கள்.

கழுத்துக்குத் தோலிலான வார் பட்டையில் ஜல் ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக் கருவிகளைச் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள்.

தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர் பச்சைகளை வைத்தும் தேங்காய் பூ பழம் நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள்.

தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனைக் காட்டப்படும். இதன்பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல் பழம் கொடுப்பார்கள்.

மாட்டு பொங்கல் கொண்டாட்டத்தில் என்ன செய்ய வேண்டும்?

• மாட்டுப் பொங்கலன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினை சுத்தம் செய்து கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து கொம்புகளை சீவி விட வேண்டும்.

• மாடுகளின் கொம்புகள் பளபளப்பாக தெரியும் வகையில் வண்ணங்கள் பூசி அழகுப்படுத்துங்கள்.

• கொம்பில் மணிகள் சலங்கைகள் அல்லது தோலாலான வார் பட்டையில் சலங்கைகளை கட்டி அவற்றை மாடுகளுக்கு அணிவித்து அலங்காரம் செய்யுங்கள்.

• பின்பு மாட்டிற்கு மஞ்சள் மற்றும் குங்குமத்தால் திலகமிட்டு மூக்கில் இருக்கும் கயிறு மற்றும் கழுத்தில் அணிவிக்கும் கயிறு போன்றவற்றை மாட்டிற்கு அணிவித்து பூஜை செய்யவும்.

மாட்டு பொங்கல் விவசாயிகளின் முக்கிய வழிபாடு உழவுக்கு பயன்படுத்தும் அனைத்து கருவிகளையும் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைப்பார்கள்.

அந்த வருடத்தில் விளைந்த பயிர் காய்கறிகளுடன் தேங்காய் பூ பழம் நாட்டு சர்க்கரை என அனைத்தும் பூஜைக்காக வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் வைத்து அதை கடவுளுக்கு படைத்து தீபாராதனை காட்டுவார்கள். பின் மாடு, ஆடு மற்றும் எருமை போன்ற கால்நடைகளுக்கு பொங்கல் மற்றும் பழம் கொடுப்பார்கள்.

இது விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளுக்கு நன்று கூறும் விதமாக கொண்டாடுகிறார்கள். 4 நாட்கள் கோலாகலமாக கொண்டாடும் பொங்கல் பண்டிகையில் இரண்டாம் நாளான மாட்டு பொங்கலை மட்டும் ஒரு போதும் விவசாயிகள் கொண்டாட மறப்பதில்லை.

ஏனெனில், சூரிய கடவுள் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கடவுளுக்கு நிகராகவும், குடும்பத்தில் ஒருவராகவும், விவசாயிகள் கருதுவது அவர்கள் ஆசையாக வளர்த்த கால்நடைகளே.

மேலும் தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி மாடுகளுக்கு பொங்கல் பழம் என அனைத்தையும் உண்ணக் கொடுத்து தங்கள் குடும்பத்தில் ஒருவராக பாவித்து மகிழ்வார்கள்.

பசுக்களை கடவுளின் மறு அவதாரமாக கருதுவதாலும் உழவுக்கு உறுதுணையாக இருந்த மாடுகளுக்கும் வீட்டில் ஒருவராய் வளர்ப்பதாலும் அவற்றிற்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கலிடுகின்றனர்.

இன்று வீட்டிலும் தொழுவத்திலும் மாட்டுப்பொங்கல் நடத்தி நன்றி செலுத்துவோமாக!


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *