யாழில் இருந்து கொழும்பு சென்ற புகையிரதம்- இடைநடுவில் பயணிகள் திண்டாட்டம்!

யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் காலை 6.30 மணிக்கு சேவையில் ஈடுபடும் பயணிகள் புகைரதம் சாவகச்சேரி- சங்கத்தானை பகுதியில் பழுதடைந்துள்ளது.

அதன்பின்னர் , புதிய புகைரதம் கொண்டுவரப்பட்டு காலை 10.30 மணிக்கு அங்கிருந்து மீண்டும் கொழும்பு நோக்கி பயணமாகியுள்ளது.

காலை 6.30 மணிக்கு புறப்பட்ட புகைரதம் 7.15 மணியளவில் சங்கத்தானை பகுதியில் பழு தடைந்து நின்றுவிட்டது.

இந் நிலையில் உடனடியாக செயற்பட்ட புகைரத திணைக்களம் யாழ்ப்பாணத்திலிருந்து மற்றொரு புகைரத இயந்திரத்தை வரவழைக்கபட்டு , பழுதடைந்த புகைரதம் சாவகச்சேரி புகைரத நிலையத்திற்கு இழுத்து செல்லப்பட்டு அங்கிருந்து புதிதாக கொண்டுவரப்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்டு புகையிரதம் கொழும்புக்கு பயணமானது.

இதனால் யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்ட நிலையில், பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *