இராணுவம் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது! இராணுவ தளபதி

எதிர்காலத்தில் ஏற்படப்போகின்ற அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு தேவையான தயார்படுத்தல் பயிற்சிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் இராணுவம் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பத்தரமுல்லையில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட இராணுவத் தலைமையகத்திற்கு சொந்தமான காணியில் மரநடுகைத் திட்டமொன்று இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இராணுவத் தளபதியும், பதில் படைகளின் பிரதானியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இன்று காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் இராணுவப் படைத் தளபதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனிடையே ஊடகங்களுக்குக் கருத்துவெளியிட்ட இராணுவத் தளபதி, இலங்கை படையினர் தற்போது படைபலத்தை அதிகரிப்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.

நாட்டின் பாதுகாவலனாக இராணுவம் தேவையான பாதுகாப்பினை வழங்கிக்கொண்டிருக்கிறது. அதேபோல மக்களுக்குத் தேவையான பாதுகாப்பினை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டு வருகின்றது.

இலங்கை இராணுவம் நாட்டிற்கு பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளையும் செய்து கொண்டுவருகிறது.

இராணுவத்தின் பல்வேறு படையணிகளும் நாட்டிலுள்ள பல பயிற்சி முகாம்களில் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

எதிர்காலத்தில் எமக்கு எதிர்பாராத வகையில் வருகின்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல் பயிற்சிகளையே செய்து வருகின்றது” என அவர் மேலும் கூறியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *