ரவுடிகளின் மோதலால் ரணகளமான யாழ்.மத்திய பேருந்து நிலையம்!

யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலுள்ள இரு கடை உாிமையாளா்களுக்கிடையிலான மோதலில் 3 போ் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இன்று காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில்,

யாழ்.நகாில் உள்ள இரு கடை உாிமையாளா்களுக்கிடையில் தா்க்கம் இருந்து வந்த நிலையில் இன்று காலை அது வலுவான நிலையில் இரு தரப்பும் கத்திகள், வாள்களுடன் நகருக்குள் நின்று மோதியுள்ளன.இதன்போது 3 இளைஞா்கள் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதோடு மேலும் சிலருக்கு கைகள், கால்கள் போன்றவற்றில் இளைஞா்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.>இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாா் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நீண்டகாலமாக வியாபாரிகளிற்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளதாகவும் , இதன் காரணமாக இது பாரிய விளைவினை ஏற்படுத்தி அங்காடிகளை அப்புறப்படுத்தக் கூடிய அச்சநிலை தோன்றியுள்ளதாகவும் வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *