யாழில் சஜீத் பிரமதாசாவுடன் முண்டியடித்து செல்பி!
நேற்று முன்தினம் யாழிற்கு சென்ற அமைச்சர் சஜீத் பிரமதாசாவுடன் பலரும் முண்டியடித்து செல்பி (Selfy)எடுத்தனர்.
யாழ்நகர மேயர் ஆர்னோல்ட் உட்பட பலரும் அமைச்சருடன் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டியிருந்தனர்.
1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்து வடக்கு கிழக்கிற்கு சென்ற போது அங்கும் முண்டியடித்து பலரும் ஆட்டோகிராபில் ( Autograf) கையொப்பம் வாங்கியிருந்தனர்.
ஆனால் ஒருவருடத்தால் அதே இந்திய அமைதிப்படை எமக்கு எதிராக துப்பாக்கி நீட்டி சுட்டவரலாறுகள் உண்டு என்பதை நாம் மீட்டிப்பார்க்கவேண்டும்.
அந்த வரலாறுகள் தந்த வலிகள் இன்னும் ஆறாத வடுவாகவே உள்ள நிலையில் , இன்றைய செல்பி நம்மை எங்கொகொண்டுபோய் விடுமோ என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.