காரைநகர் கடற்பகுதியில் நான்கு இந்திய மீனவர்கள் கைது!

காரைநகர் கடற்பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார்.

நேற்றிரவு வழமையான கடல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது காரைநகர் எலரா கடற்படை முகாமினை சேர்ந்த கடற்படைவீரர்கள் இவர்களை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழக மாநிலம் புதுக்கோட்டை பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட ரோலர் படகு ஒன்று கைப்பற்றப்பட்டு காரைநகர் கடற்படைதளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ். கடற்றொழில் நீரியல்வளத்துறையின் மாவட்ட உதவி பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *