யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்ப முழுமூச்சாக செயற்படுவேன்! – பிரதமர் ரணில்

யுத்தத்தால் யாழ்ப்பாணம் முற்றாக சீரழிந்தது. அந்த யாழ்ப்பாணத்தை மீள கட்டியெழுப்ப முழுமூச்சாக ஈடுபடுவேன் என உறுதிபட கூறுகின்றேன்.

அதிஉயர் பாதுகாப்பு வலயம் மெல்ல மெல்ல குறுகிக்கொண்டு செல்லுகின்றது அதில் மக்களுக்கான குடியேற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன மீள்குடியேற்றத்துக்கான நிதி பெரும்பிரச்சினையாக இருக்கின்றது.

அதனையும் நாம் தீர்த்து வைப்போம். வன்னி பகுதியில் அபிவிருத்தி திட்டத்துக்கு 14 பில்லியன் ரூபாக்களை ஒதுக்கியுள்ளோம்.

10 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தினை யாழ்ப்பாணத்தில் இதுவரை 1500 பூர்த்தி செய்துள்ளோம். மேலதிகமான வீடுகள் உதாகம் திட்டத்தில் அமைத்துக்கொடுக்கப்படும்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *