நல்லூர் ஆலயத்தில் விசேட பாதுகாப்பு கருவி! இன்று முதல் புதிய நடைமுறை

யாழ்ப்பாணம் – நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களின் நலன்கருதி விசேட பாதுகாப்பு இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

வட மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய இன்று மாலை ஸ்கானர் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும், ஸ்கானர் இயந்திர பரிசோதனையின் பின்னரே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேவேளை, ஸ்கானர் இயந்திரம் கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ள இயந்திரத்திற்கு வட மாகாண சபை பணம் செலுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *