முல்லைத்தீவில் பறிபோனது அரச ஊழியர்களின் வீடுகள்!

அரச ஊழியர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முல்லைத்தீவு, பனிக்கன்குளம் பகுதியில் ஐம்பது நிரந்தர வீடுகள் அரச ஊழியர்களுக்காக நிர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த வீடுகளை பெற்றுக்கொண்ட அரச ஊழியர்கள் நிரந்தர வீடுகளில் குடியேறாததன் காரணமாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டுத்திட்டங்களுக்கு உள்வாங்கப்படாத பனிக்கன்குளம் பிரதேச மக்களுக்கு குறித்த வீடுகளை வழங்குவதற்கான பதிவுகளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை நிரந்தர வீடுகளில் குடியேறாதவர்கள் தொடர்பான விவரங்களை பிரதேச செயலகங்கள் மூலம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் திரட்டி வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *