வல்வெட்டித்துறையில் நபரொருவரை காணவில்லை என முறைப்பாடு!

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையில் நபரொருவரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வல்வெட்டித்துறை, நெடியகாடு பகுதியை சேர்ந்த 34 வயதுடைய கிருஷ்ணதாஸ் இளங்கோ என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் வல்வெட்டித்துறை தீர்த்தக்கரை பகுதியில் நேற்றுமுன் தினம் இரவு இருந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அதன் பின்னரே குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *