எனது நோக்கம் இதுவே! யாழ். கட்டளைத் தளபதி நல்லூர் ஆலய வளாகத்தில் தெரிவிப்பு

வடக்கில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதே தனது நோக்கம் என யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய இன்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அங்கு இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ்ப்பாண படைகளின் கட்டளைத் தளபதி,

வடக்கில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதே எனது நோக்கமாக இருப்பதாகவும் அதற்காக தான் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது நல்லூர் ஆலயத்தை தரிசித்து செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *