நந்திக்கடல் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள கண்கவர் மாற்றம்

வலசை பறவையான பிளமிங்கோ எனப்படும் பூநாரைகளின் வருகை முல்லைத்தீவு நந்திக்கடல் கடல்நீரேரி பகுதியில் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.

இயற்கையான கண்டல் தாவர சூழலை கொண்டமைந்த இடமாக நந்திக்கடல் நீரேரி காணப்படுவதால் இந்தச்சூழல் பறவைகள் இரைதேடவும் தங்கி செல்லவும் வாய்ப்பாக இருக்கிறது.

இதனால் உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பறவை இனங்கள் தற்போது இந்த இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளன.

அந்த வகையில் பிளமிங்கோ எனப்படும் பூநாரைகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

இந்த மாற்றம் காரணமாக பறவை ஆய்வாளர்களின் கவனமும், சுற்றுலாப் பயணிகளின் கவனமும் இந்த நந்திக்கடல் நீரேரிக்கு வருகின்ற வலசைப்பறவைகள் மீது இப்போது திரும்ப ஆரம்பித்துள்ளது.

பூமியின் வடக்கு பகுதியில் பனிபடிய ஆரம்பிக்கும்போது அப்பிரதேசங்களில் வாழுகின்ற பறவைகள் இரை தேடுவதற்காக வெப்ப பிரதேசங்களை நோக்கி கூட்டம் கூட்டமாக குடிபெயர்கின்றன.

குளிர்விலகும் போது தங்கள் சொந்த இடங்களுக்கு பாதை தவறாமல் திரும்பிச்செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *