யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேருந்து கோர விபத்து – உயிரிழந்தவர்களின் விபரம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன.

கோர விபத்தில் நல்லூர், திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 12, 30 மற்றும் 53 வயதான இரு பெண்களும் சிறுமியும் உயிரிழந்துள்ளனர்.

கல்வியங்காட்டை சேர்ந்த சதாசிவம்(சிறி), சுகி மற்றும் அஜந்தன் கோபிகா ஆகியோர் வாகன விபத்தில் பலியாகி உள்ளனர்.

யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, எதிர்த்திசையில் பயணித்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் மதவாச்சி – அனுராதபுரம் பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் தாயும் மகளும், இன்னுமொரு சிறுமியும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *