வடக்கு மாகாண ஆளுநரின் ஆணை செல்லாக்காசா?? நடப்பது என்ன?

வடமாகாணத்தில் கட்டுக்கடங்காமல் அலறும் ஒலிபெருக்கிகளை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளுக்கும் பொலிசாருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டதாக நேற்றுமுன்தினம் ஆளுனரின் ஊடகப்பிரிவு அறிவித்திருந்தது.

இது யாழ் குடாநாட்டு மக்களுக்கு மகிழச்சி தரும் செய்தியாக அமைந்திருந்தது. இருந்தும் என்ன பயன் அதன்பின்னரும் யாழ் குடாநாட்டில் குறிப்பாக வலி-மேற்கு ,வலி-தென்மேற்கு பிரதேசங்களில் எந்தவித மாற்றமுமின்றி அலறிக்கொண்டே இருக்கின்றன.

ஆளுனரின் பணிப்புரை அரச அதிகாரிகளாலும் பொலிசாராலும் வெளிநாட்டு காசில் மக்களை வதைக்கும் காவாலிகள் சிலராலும் உதாசீனம்செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறுதான் 3 வருடங்களுக்கு முன்பும் யாழ் மேல் மேல்நீதிமன்றினால் ஒலிபெருக்கிகள் ஆலய வளாகத்தில் மட்டுப்படுத்ப்பட்டு ஒலியளவு குறைக்கப்படவேண்டும் என இரண்டு தடவைகள் உத்தரவிட்டும் அவை இன்றுவரை உதாசீனம்செய்யப்பட்டுள்ளது.

இன்றும்கூட (28) யாழ்குடாநாட்டின் வலிகாமம் பகுதியில் உத்தரவுமீறப்பட்டுள்ளன. பொலிஸ் நிலையத்திற்கும் ,அவசர பொலிஸ் இலக்கத்திற்கும் அறிவித்தாலும் நடவடிக்கை எடுக்கிறார்கள் இல்லை.

இதற்குகாரணம் நடவடிக்கை எடுக்கவேண்டியவர்களுக்கு உரிய கவனிப்பு கிடைக்கின்றது. இன்று யாழ் சண்டிலிப்பாயில் மாகியப்பிட்டி- தொட்டிலடி வீதிலுள்ள இரட்டைப்புலவு லைரவர் கோவிலில் வீதியில் மிக நீண்ட தூரத்திற்கு ஒலிபெருக்கிகளை கட்டி ரீமிக்ஸ் பாட்டுக்களை ஒலிபரப்பியபடியுள்ளனர்.

பொதுப்பரீட்சைக்கு தயார்படுத்தும் மாணவர்களின் வேதனை சொல்லவே முடியாதுள்ளது. இவ்வாலயத்தின் வளாகத்தோடு சேர்ந்து சண்டிலிப்பாய் வடக்கு அ.த.க பாடசாலையும் தனியார் கல்விநிலையம் ஒன்றும் காணப்படுகின்றது.

யாழ் குடா நாட்டில் ஒலிபெருக்கிகளின் தொல்லைகளும் அதன் பின்னணிகளும் குறித்த விரவான தொகுப்பொன்று ஆதாரங்களுடன் மிகவிரைவில் எமது தளத்தில் வெளியாகவுள்ளது!

ஆளுனரின் பணிப்பினால் என்ன பயன்!! செல்லாக்காசாகிவிட்டதா ??

வடமாகாணத்தில் கட்டுக்கடங்காமல் அலறும் ஒலிபெருக்கிகளை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளுக்கும் பொலிசாருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டதாக நேற்றுமுன்தினம் ஆளுனரின் ஊடகப்பிரிவு அறிவித்திருந்தது. இது யாழ் குடாநாட்டு மக்களுக்கு மகிழச்சி தரும் செய்தியாக அமைந்திருந்தது. இருந்தும் என்ன பயன் அதன்பின்னரும் யாழ் குடாநாட்டில் குறிப்பாக வலி-மேற்கு ,வலி-தென்மேற்கு பிரதேசங்களில் எந்தவித மாற்றமுமின்றி அலறிக்கொண்டே இருக்கின்றன.ஆளுனரின் பணிப்புரை அரச அதிகாரிகளாலும் பொலிசாராலும் வெளிநாட்டு காசில் மக்களை வதைக்கும் காவாலிகள் சிலராலும் உதாசீனம்செய்யப்பட்டுள்ளது. இவ்வாறுதான் 3 வருடங்களுக்கு முன்பும் யாழ் மேல் மேல்நீதிமன்றினால் ஒலிபெருக்கிகள் ஆலய வளாகத்தில் மட்டுப்படுத்ப்பட்டு ஒலியளவு குறைக்கப்படவேண்டும் என இரண்டு தடவைகள் உத்தரவிட்டும் அவை இன்றுவரை உதாசீனம்செய்யப்பட்டுள்ளது. இன்றும்கூட (28) யாழ்குடாநாட்டின் வலிகாமம் பகுதியில் உத்தரவுமீறப்பட்டுள்ளன. பொலிஸ் நிலையத்திற்கும் ,அவசர பொலிஸ் இலக்கத்திற்கும் அறிவித்தாலும் நடவடிக்கை எடுக்கிறார்கள் இல்லை.இதற்குகாரணம் நடவடிக்கை எடுக்கவேண்டியவர்களுக்கு உரிய கவனிப்பு கிடைக்கின்றது. இன்று யாழ் சண்டிலிப்பாயில் மாகியப்பிட்டி- தொட்டிலடி வீதிலுள்ள இரட்டைப்புலவு லைரவர் கோவிலில் வீதியில் மிகநீண்டதூரத்திற்கு ஒலிபெருக்கிகளை கட்டி ரீமிக்ஸ் பாட்டுக்களை ஒலிபரப்பியபடியுள்ளனர். பொதுப்பரீட்சைக்கு தயார்படுத்தும் மாணவர்களின் வேதனை சொல்லவே முடியாதுள்ளது. இவ்வாலயத்தின் வளாகத்தோடு சேர்ந்து சண்டிலிப்பாய் வடக்கு அ.த.க பாடசாலையும் தனியார் கல்விநிலையம் ஒன்றும் காணப்படுகின்றது. யாழ் குடா நாட்டில் ஒலிபெருக்கிகளின் தொல்லைகளும் அதன் பின்னணிகளும் குறித்த விரவான தொகுப்பொன்று ஆதாரங்களுடன் மிகவிரைவில் எமது தளத்தில் வெளியாகவுள்ளது!

Posted by newjaffna on Ahad, 28 Julai 2019


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *