வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசாங்கம் செய்த காரியம்! பசில் ராஜபக்ச வெளிப்படுத்திய தகவல்

முற்போக்கு அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தாய்நாடு எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக எதிர்நோக்க வேண்டுமாயின் கிரமமான அரசியல் திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தேசிய காங்கிரஸ், ஜனநாக தேசிய அமைப்பு உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் இன்றைய தினம் பசில் ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுதல் மற்றும் கொள்கை வகுப்பின் போது உதவிகளை பெற்றுக் கொள்ளுதல் போன்றன தொடர்பில் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *