யாழில் ஒரு குடும்பமே கஞ்சாவுடன் கைது !!

யாழ். மாதகல் பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 04 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

அத்தோடு, இச்சந்தேகநபர்களிடமிருந்து 64 கிராம் கேரள கஞ்சாவையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பகுதியில் இளவாலை பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் நடத்திய சோதனையின்போது, இச்சந்தேகநபர்கள் நேற்று (10) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் 03 மகன்களுமே கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, 50, 27, 26, 22 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *