பிக்குவால் மீண்டும் நீதிமன்றம் செல்லும் பிள்ளையார்! சூடுபிடித்த விசாரணகள்

முல்லைத்தீவு – செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் விவகாரங்கள் இன்றைய தினம் வவுனியா மேல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய பகுதியில் மேதானந்த தேரர் என்ற பௌத்த துறவியால் பாரிய புத்தர் சிலை ஒன்று நாட்டப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழிபாடுகளுக்கு ஆலயத்திற்கு சென்ற மக்களோடு முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த இடத்திலேயே அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸாரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த ஜுன் மாதம் ஆறாம் திகதி குறித்த பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்துக்கு இன்னமும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவில்லை எனவும், இதனால் இரண்டு தரப்பினரும் இடையூறு இல்லாமல் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும், அதை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக பௌத்த துறவி மற்றும் பௌத்த துறவி சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் உள்ளிட்டோரால் வவுனியா மேல் நீதிமன்றில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம், ஆலய நிர்வாக சபையினர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *