கோலாகலமாக ஆரம்பித்த நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று நண்பகல்- 12 மணியளவில் மிகவும் பக்திபூர்வமாக கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ச்சியாகப் பதினாறு தினங்கள் இடம்பெறவுள்ள ஆலய மஹோற்சவப் பெருவிழாவில் இந்தமாதம்-11 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு திருமஞ்சத் திருவிழாவும், 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தேர்த் திருவிழாவும் இடமபெறவுள்ளன.

அத்துடன் மறுநாள் செவ்வாய்க்கிழமை முற்பகல்-11 மணியளவில் தீர்த்தோற்சவமும் இடம்பெறுமென ஆலய அறங்காவலர் சபையினர் தெரிவித்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *