இதனால் தான் மெர்சல் படத்தில் இருந்து வெளியேறினேன்! ஓப்பனாக கூறிய ஜோதிகா

v

நடிகை ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக திருமலை, குஷி போன்ற படங்களில் நடித்தவர். அதன் பிறகு 2017ல் வெளிவந்த மெர்சல் படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். அதன்பிறகு நித்யா மேனன் அந்த ரோலில் நடித்தார்.

இந்நிலையில் ஜோதிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில் இது பற்றி பேசியுள்ளார். “படத்தின் ஸ்கிரிப்ட் பற்றி எனக்கும் இயக்குனருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் படத்தில் இருந்து விலகிவிட்டேன். creative difference மட்டும் தான் காரணம்” என அவர் கூறியுள்ளார்.

இந்த ரோலுக்காக நித்யா மேனன் பிலிம்பேர் சிறந்த நடிகை விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் தற்போது ஜோதிகாவை விமர்சித்து பேசி வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *