“யாழ். போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் மனைவி! கணவர் தலைமறைவு..”

யாழ்.குருநகர் சென்ரோஸ் வாசிகசாலைக்கு அருகாமையில் உள்ள வீதியில் இன்று நண்பகல் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தகராறு காரணமாக மனைவி மீது கணவன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாக்குதலின்போது மனைவி கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளதுடன், தற்போது அவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவன் 45 வயதுடையவர் எனவும், மனைவி 40 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கணவர் தலை மறைவாகியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *