“வடமாகாண ஆளுநருக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயருக்கும் இடையில் சந்திப்பு”

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனிற்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஆளுநர் அலுவலகத்தில் நேற்று மாலை இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது மன்னார் மாவட்டம் தொடர்பான பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும், தற்கால சூழ்நிலைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதில் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர்சோசை அடிகளார் மற்றும் மறைமாவட்ட குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *