யுத்தத்தால் பாதிக்கப்பட்டு ஒரு நேர சோற்றுக்காக வீதியில் கையேந்தி வாழும் எமது தமிழ் உறவுகள்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தன் பிள்ளைகளை பறிகொடுத்து தற்போது அனாதையாய் ஒரு நேர சோற்றுக்காய் கையேந்தி வாழும் எமது தமிழ் உறவுகள் இன்று ஏராளம். இவ் நிலை நமக்கு நேரிட்டு இருந்தால்? என்ன நடந்துயிருக்கும் என சமூக வலைதளத்தில் இதனை நேரில் பார்த்த ஆர்வலர் ஒருவர் குறித்த பதவினை பதிவிட்டதும் இல்லாமல் கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

முல்லைதீவில் இறுதி யுத்தத்தில் நமக்காக ஒரு பிள்ளையையும் செல் குண்டுதாக்குதலில் ஒரு பிள்ளையையும் இழந்து பெற்ற மகளால் கைவிடப்பட்டு அன்றாட உணவுக்காக கையேந்தி திரியும் நிர்கதி நிலையில் தன் மனைவியுடன் யாசகம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களின் நிலைக்கும் எதோ ஒரு வகையில் நாமமும் ஒரு காரணம். ஆனால் நாமோ கண்டு கொள்வதில்லை. தள்ளாத வயதிலும் தன் மனைவியை கூட தள்ளிவைக்காது தன்னுடனே சுமந்து செல்லும் இப் பெரியவர் ஆயிரம் நோய்களை சுமந்து கொண்டாலும் மரணம் வரை கணவன் கையை கைவிடாத அந்த தாய்.

மக்கள் புலக்கம் அதியமுள்ள இடங்களில் அமர்ந்தால் ஒரு வேளை உணவுக்காவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் வெயில் என்றும் மழை என்றும் பாராது நகர மத்தியிலும் வீதி நடை பாதைகளிளும் வீதி சுற்று வட்டங்களிளும் கத்திருக்கும் ஏழைகளுக்கு எப்போதும் ஏமாற்றமே மீதமாகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *