யாழ்.தேர்தல் ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு!

இதுவரை வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக அதனை பெற்றுக் கொண்டு தங்கள் வாக்குரிமையை உறுதிப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த படிவத்தினை தத்தமது கிராம சேவகர் ஊடாக பெற்றுக் கொள்ளுமாறு யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அதோடு வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் பெறுவதில் சிக்கல்கள் உள்ளவர்கள் உடனடியாக முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த மே மாதம் 15 ஆம் திகதியில் இருந்து யூன் மாதம் 14 ஆம் திகதிவரைக்கும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கப்பட்ட நிலையில், படிவங்கள் உரிய முறையில் தம்மை வந்தடையவில்லை என சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

படிவத்தினை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது கிடைக்காதவர்கள் உடனடியாக தத்தமது கிராம சேவர் ஊடாக அப் படிவத்தினை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.

வாக்காளர் கணக்கொடுப் படிவம் பெற்றுக் கொள்வதில் பிரச்சினைகள் இருப்பின் யாழ்.மாவட்ட தேர்தல் அலுவலக தெலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் என்றும் உதவித் தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார்.

 

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *