“ஐ.நா அபிவிருத்தி திட்ட இலங்கை பணிப்பாளர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு”

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் Mr.Joern Soerensen னை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு இன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு விபரிக்கப்பட்டுள்ளது.

இதன்போது போரினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாகாணமாக வடமாகாணம் காணப்படுவதால் இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தினை பொருளாதார ரீதியாக உயர்த்தக் கூடிய திட்டங்களை செயற்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, வடமாகாண மக்கள் எதிர்கொண்டு வரும் நீர்ப்பிரச்சனையை தீர்வுக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கும் வடமராச்சிக்களப்பு திட்டம் உள்ளிட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் குறிப்பிட்ட ஆளுநர், இதற்கு உதவிபுரியுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்தியாவில் வாழ்ந்துவரும் இலங்கை அகதிகள் தொடர்பில் குறிப்பிட்ட ஆளுநர், குறித்த அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஐ.நா உதவி புரியவேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளார்.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *