நல்லூர் கந்தனை தரிசிக்க சென்ற யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி!

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி இன்று நல்லூர் கந்தனை தரிசிக்க சென்றுள்ளார்.

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவத்தினர் இன்று சர்வமத வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் அவர்கள் யாழிலுள்ள கிறிஸ்தவ மற்றும் இந்து மற்றும் இஸ்லாம் மதத் தலங்களில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஐர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சியின் ஏற்பாட்டில் அவரது தலைமையிலேயே இவ் வழிபாடுகள் இன்று இடம்பெற்றிருந்தது.

மேலும் இந்த வழிபாடுகளில் மாவட்ட இராணுவ உயர் அதிகாரிகள் இராணுவ வீரர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *