வலி வடக்கு பிரதேசதில் வடக்கு ஆளுநர் – மாவை

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில் வலி வடக்கு பிரதேசத்திற்கு இன்று முற்பகல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் விஜயம் மேற்கொண்டார்.

அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன் வலி வடக்கில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது வலி வடக்கு காங்கேசன்துறை பகுதியில் கடற்படையினர் வசமுள்ள நகுலேஸ்வரம் புனித பூமிக்கு சொந்தமான 42 ஏக்கர் காணி உட்பட பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளின் விடுவிப்பு தொடர்பிலும் ஆராயப்பட்டது.

மேலும் இந்த விஜயத்தின்போது ஆளுநர்….

பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி ஆகியவற்றிற்கும் விஜயத்தினை மேற்கொண்டு பாடசாலைகளின் தற்போதைய நிலவரங்கள் குறித்து பாடசாலை அதிபர்களிடம் கேட்டறிந்துகொண்டதுடன் மாணவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

இந்த விஜயத்தின்போது வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் திரு சுகிர்தன் மற்றும் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளீதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *