13. 06. 2019 இன்றைய இராசிப் பலன்கள்

மேஷம்
இன்று வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மேலிடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

ரிஷபம்
இன்று வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்து சேரும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

மிதுனம்
இன்று . குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உங்கள் உழைப்பினை தொடர்ந்து செய்வதன் மூலம் வெற்றியை உங்கள் பக்கம் தக்க வைத்துக் கொள்ளலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கடகம்
இன்று உறவினரிடையே பேசுவதை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. பண வரவில் தடை இருக்காது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

சிம்மம்
இன்று குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. உடல் நலம் சீராகும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கன்னி
இன்று பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6

துலாம்
இன்று எதிலும் எதிர்பாராத வகையில் நன்மைகள் நடக்கும். சிலரது செயல் பாடுகள் உங்களுக்கு நன்மையை அளிக்கும். வெற்றியின் அறிகுறிகள் தெரியும். மனம் மகிழ்ச்சியில் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6

விருச்சிகம்
இன்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சினை அகலும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6

தனுசு
இன்று இல்லத்தில் மகிழ்ச்சி குடி கொண்டிருக்கும். சிலரின் பிரச்சினைகளை நீங்கள் முன்னின்று தீர்த்து வைப்பீர்கள். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியைத் தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9

மகரம்
இன்று சொத்து விவகாரங்களில் இருந்து வந்த பிரச்சினை அகலும். சிலர் உங்களை பார்த்து பொறாமையில் இருப்பர். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை வந்து போகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5

கும்பம்
இன்று உற்சாகமாக இருக்க வேண்டிய நாள். அவ்வப்போது அலுப்பு தோன்றும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்
இன்று வாழ்வில் முன்னேற்றத்திற்கான வழி தெரியும் நாள். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிடைப்பதற்கான நாள். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *