வவுனியாவில் பாடசாலைக்கு முன்பாக குடை சாய்ந்த லொறி! 7 பேரின் நிலை!

வவுனியா மடுகந்தை தேசிய பாடசாலைக்கு முன்பாக லொறி குடைசாய்ந்ததில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து இன்று காலை திருகோணமலை நோக்கி எரு ஏற்றிக்கொண்டு பயணித்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் லொறியில் பயணித்த 7 பேரும் காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற மடுகந்தை பொலிஸார் போக்குவரத்தினை சீர்செய்ததோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *