யாழில் காணாமல் போன மீனவர்கள் – ஏக்கத்தில் உறவினர்கள்!

யாழ்.காரைநகரில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்கள் காணாமல் போய் ஒருவார காலம் கடந்தும் அவர்கள் தொடர்பில் எந்தவிதமான தகவலும் கிடைக்காமையால் உறவினர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2ஆம் திகதி காரைநகர் மத்தியை சேர்ந்த கோடீஸ்வரன் குகபிரியன் , தவராசா சத்தியராஜ் ஆகிய இருவரும் கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர்.

அது தொடர்பில் கடந்த 4ஆம் திகதி உறவினர்களால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை அடுத்து அது தொடர்பில் பொலிசார் கடற்படையினருக்கு அறிவித்தனர்.

அத்துடன் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் குறித்த இருவரையும் கடலில் தேடும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

எனினும் குறித்த மீனவர்கள் காணாமல்போய் ஒரு வார காலமாகியும் அவர்கள் தொடர்பில் எந்தவிதமான தகவல்களும் கிடைக்க பெறாமையால் உறவினர்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *