தென்மராட்சியில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்! மயிரிழையில் உயிர் தப்பிய காவலாளி..!

தென்மராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிளை விற்பனை நிலையம் ஒன்றின் மீது, இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.நாவற்காடு பகுதியில் அமைந்துள்ள குறித்த சங்கத்தின் கிளை மீதே மோட்டார் சைக்கிள் வந்தவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தாக்குதலை அடுத்து, கடமையில் இருந்த காவலாளி அது தொடர்பில் சாவகச்சேரி பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.குறித்த கிளை மூடப்பட்டு இருந்தமையால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *