இரட்டை மாட்டு வண்டிச்சவாரி போட்டியில் வெற்றி பெற்ற மன்னார்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி மன்னாரில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த போட்டி நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பரிகாரி கண்டல் பகுதியில் உள்ள இரட்டை மாட்டு வண்டி சவாரி திடலில் நேற்று இடம் பெற்றது.

குறித்த போட்டியில் மொத்தமாக 21 ஜோடி காளைகள் பங்குபற்றின.

A,B,C,D ஆகிய நான்கு பிரிவுகளாக போட்டிகள் இடம் பெற்றது. இந்த போட்டியில் மன்னார் மாவட்ட காளைகளின் சொந்தக்காரர்கள் மற்றும் யாழ். மாவட்ட காளைகளின் சொந்தக்காரர்களும் போட்டியில் பங்கு பற்றியுள்ளனர்.

இப்போட்டியில் நான்கு பிரிவுகளிலும் மன்னார் மாவட்ட காளைகளின் உரிமையாளர்கள் முதலிடத்தை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *